என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி"
- ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
ஈரோடு, ஆக. 13-
ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை யொட்டி போதைப் பொருள் தடுப்பு, போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையொட்டி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் அமைச்சர் சு.முத்து சாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்க ளின் மனநலம் மற்றும் கற்றல் குறைபாடுகள் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.
இப்பயிற்சியில் 240 ஆசிரியர்கள் நேரடியாக வும், 380-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர்.
மேலும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, ஈரோடு மற்றும் திகிணாரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
பனக ஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து தாளவாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி யில் போதைப்பு பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும், கோபி செட்டி பாளையம் அடுத்த கரட்டடி பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்களுக்கான உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
மேலும் போதை பொருள் தடுப்பு குறித்து டாக்டர்கள், செவிலியர்கள் பேசினர்.
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்